’சரியான கதாநாயகியைத் தேடி வருகிறோம்’ - ’எல்லம்மா’ பட தயாரிப்பாளர்

ஆரம்பத்தில், நடிகர் நிதின் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார்.;

Update:2025-12-01 20:49 IST

சென்னை,

எல்லம்மா படத்தின் கதாநாயகி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை தில் ராஜு உறுதிப்படுத்தி இருக்கிறார். பாலகம் பட புகழ் வேணு யெல்டாண்டி இயக்க உள்ள இந்தப் படம் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது.

ஆரம்பத்தில், நடிகர் நிதின் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் பின்னர் சில காரணங்களால் அவர் விலகினார். இதனால் படத்தின் நகர்வு மேலும் மந்தமாகியது.

இந்நிலையில், கதாநாயகன் முடிவடையவுள்ளதாகவும், சரியான நடிகையை தேடி வருவதாகவும் தில் ராஜு தெரிவித்தார். கதாநாயகி யார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்