’அவதார் 3’ - டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதி அறிவிப்பு
இப்படம் வரும் வருகிற 19ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் வெளியானது.
தற்போது அதன் 3-ம் பாகம் உருவாகி உள்ளது. இதற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து இந்திய ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் முன்பதிவு வரும் 5 அன்று தொடங்க உள்ளது.