'நான் விவாகரத்து பெற்றபோது அவர்கள் கொண்டாடினார்கள்'...சமந்தா

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சமந்தா, பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.;

Update:2025-10-24 09:06 IST

சென்னை,

நடிகை சமந்தா கடைசியாக 'சுபம்' படத்தில் நடித்திருந்தார். ஒரு தயாரிப்பாளராக அவரது முதல் படம் இது ஆகும். தற்போது அவர் பாலிவுட்டில் 'ரக்த் பிரம்மந்த்' என்ற படத்திலும், சாம் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 'மா இன்டி பங்காரம்' என்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

பாலிவுட் இயக்குநனரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடுமோருவை சமந்தா காதலிப்பதாக கிசுகிசுக்கள் உள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து அவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. இதற்கிடையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சமந்தா, பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் நான் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன். நான் சிக்கலில் இருந்தபோது, சிலர் அதை கொண்டாடினர். எனக்கு மயோசிடிஸ் வந்தபோது கேலி செய்தனர், விவாகரத்தின் போது கொண்டாடினர். இதையெல்லாம் பார்த்து எனக்கு மனம் வலித்தது.

ஆனால் படிப்படியாக நான் அதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்," என்றார். இந்தக் கருத்துக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்