'சொகுசு கார் இருந்தால்தான் மதிக்குறாங்க...'- சாம் சி.எஸ். வருத்தம்

தோற்றத்தையும், எந்த காரில் வருகிறோம்? என்பதை வைத்துதான் இங்கே மதிப்பீடு செய்யப்படுவதாக சாம் சி.எஸ் கூறியுள்ளார்.;

Update:2025-07-25 06:28 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக திகழும் சாம் சி.எஸ்., தனது வாழ்க்கை பயணம் குறித்த சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, ''என் வாழ்க்கையில் நிறைய மேடு, பள்ளங்களை எதிர்கொண்டு இருக்கிறேன். சிலவற்றை என்னால் மறக்கவே முடியாது. நான் சொகுசு காரை வாங்கியதை விமர்சனம் செய்கிறார்கள். அதற்கு பின்னணியில் உள்ள கதை யாருக்கும் தெரியாது.

ஒருதடவை நட்சத்திர ஓட்டலில் நடந்த பட விழாவுக்கு எனது மோட்டார் சைக்கிளில் சென்றேன். பாதுகாவலர்கள் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. நான் தான் படத்தின் இசையமைப்பாளர் என்று சொல்லியும் நம்பவில்லை. இதையடுத்து தயாரிப்புக்குழுவினர் வந்து என்னை உள்ளே அழைத்து சென்றார்கள்.

தோற்றத்தையும், எந்த காரில் வருகிறோம்? என்பதை வைத்துதான் இங்கே மதிப்பீடு தயாராகிறது என்பதை புரிந்துகொண்டேன். அதனால்தான் சொகுசு காரை வாங்கினேன். மற்றபடி ஆடம்பரத்தை நானும் விரும்புவது கிடையாது'', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்