ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் 'தக் லைப்' - படக்குழு அறிவிப்பு

கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்துள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-05-26 17:31 IST

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் எல்லா மொழிகளிலும் படத்திற்கான புரொமோஷன் வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ள 'தக் லைப்' திரைப்படத்தை, ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியிடவுள்ளதாக பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்