சித்தார்த் நடிக்கும் புதிய படம்...டைட்டில் அறிவிப்பு

'டக்கர்' படத்திற்குப் பிறகு கார்த்திக் ஜி கிரிஷுடன் சித்தார்த் மீண்டும் இணைந்துள்ளார்.;

Update:2025-11-08 18:05 IST

சென்னை,

பிரபல தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ், சித்தார்த் நடிக்கும் புதிய படத்தை அறிவித்து , அதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ’ரவுடி அண்ட் கோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்குகிறார்

2023 ஆம் ஆண்டு வெளியான 'டக்கர்' படத்திற்குப் பிறகு கார்த்திக் ஜி கிரிஷுடன் சித்தார்த் மீண்டும் இணைந்துள்ளார்..

சுதன் சுந்தரம் தனது பேஷன் ஸ்டுடியோஸ் பேனர் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தயாரிப்பாளர்கள் இன்னும் கதைக்கள விவரங்களை வெளியிடவில்லை, ஆனால் படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

மேலும் செய்திகள்