மகேஷ் பாபு-ராஜமவுலி படத்தின் தலைப்பு...இந்த தேதியில் வெளியாகிறதா?

இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.;

Update:2025-10-10 12:03 IST

சென்னை,

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் 'எஸ்.எஸ்.எம்.பி 29' இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த மிகப்பெரிய படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இப்படத்தின் தலைப்பை வருகிற நவம்பர் 16 அன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜென்63 மற்றும் வாரணாசி ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்