டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;
மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.