அஜித்தின் 'ஏகே 64' பட அப்டேட்

'ஏகே 64' படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது;

Update:2025-07-02 07:51 IST

சென்னை,

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

Advertising
Advertising

அஜித்தின் சினிமா கேரியரிலேயே அதிக வசூலை அள்ளிய சாதனையை குட் பேட் அக்லி திரைப்படம் படைத்தது. மேலும் 'குட் பேட் அக்லி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 'ஏகே 64' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப் போகிறார் என்று ஹிண்ட் கொடுத்திருந்தார்.

அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 'ஏகே 64' நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், 2025 அக்டோபர் மாதம் வரை சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், அஜித்தின் 'ஏகே 64' படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, 'ஏகே 64' படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளதாகவும் என தகவல் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்