ரஜினிகாந்தை சந்தித்த விஜய் குமார்...'கூலி' படப்பிடிப்புத் தளத்தில் நிறைவேறிய ஆசை

'உறியடி' படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தவர் விஜய் குமார்.;

Update:2025-02-25 06:08 IST

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'உறியடி' படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்த விஜய்குமார், 'கூலி' படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும், இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த லோகேஷ்-க்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்