திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி...ஷாக்கான ரசிகர்கள்

படக்குழுவினருடன் திரையரங்கம் சென்ற விஜய் சேதுபதியை, ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.;

Update:2025-07-28 07:30 IST

சென்னை,

சென்னை கமலா திரையரங்கில், தனது நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை காண நடிகர் விஜய் சேதுபதி சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாண்டியராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, முதல்நாளிலேயே ரூ.6 கோடியை வசூலித்தது.

இந்நிலையில், படக்குழுவினருடன் கமலா திரையரங்கம் சென்ற விஜய் சேதுபதியை, ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை படக்குழு சந்தித்தபோது, அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டியராஜ் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

பின்னர் பேசிய இயக்குனர் பாண்டியராஜ், கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை படங்களுக்கு பிறகு பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்