''அந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டும்...ஆனால் அல்லு அர்ஜுன்''- விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு தற்போது 'காதி' படத்தில் அனுஷ்காவுடன் நடித்துள்ளார்.;

Update:2025-08-31 07:50 IST

சென்னை,

ஒரு ஹீரோ செய்ய வேண்டிய படங்கள் சில சமயங்களில் இன்னொரு ஹீரோவுக்குச் செல்வது திரைத்துறையில் சகஜம். சமீபத்தில் இதேபோன்ற ஒன்று நடந்திருக்கிறது. நடிகர் விக்ரம் பிரபு ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்தார். தான் நடிக்க வேண்டிய ஒரு படத்தில் அல்லு அர்ஜுன் நடித்ததாக கூறினார்.

தெலுங்கில், விக்ரம் பிரபு தற்போது 'காதி' படத்தில் அனுஷ்காவுடன் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில், விக்ரம் பிரபு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினார். 'நான் முன்பு அனுஷ்காவுடன் ஒரு படம் நடித்திருக்க வேண்டும். இயக்குனர் குணசேகர் முதலில் 'ருத்ரமாதேவி' படத்தில் கோன கன்னா ரெட்டி வேடத்திற்காக என்னை அணுகினார்.

அவர் மூன்று மாதங்கள் தேதி கேட்டார். ஆனால் அந்த நேரத்தில் நான் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தார்'' என்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்