மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்ற விமலின் 'வடம்' பட பூஜை
விமல் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு வடம் என பெயரிடப்பட்டுள்ளது.;
கோவை,
கோவையிலுள்ள புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் விமலின் 'வடம்' படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூஜையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு படக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கடைசியாக 'தேசிங்குராஜா 2' படத்தில் நடித்திருந்த விமல், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி இருக்கிறார்.
இப்படத்திற்கு வடம் எனப்பெயரிடப்பட்டுள்ளது. கேந்திரன் எழுதி இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சங்கீதா கதாநாயகியாக நடிக்கிறார்.