'என் தந்தையின் அந்த படத்தை ரீமேக் செய்தால்...அவர்தான் இயக்க வேண்டும்' - விஷ்ணு மஞ்சு

விஷ்ணு மஞ்சு நடித்துள்ள ’கண்ணப்பா’ படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-06-04 08:44 IST

சென்னை,

விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான்- இந்திய திரைப்படமான 'கண்ணப்பா' வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளது. முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்தப் படம், வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி உருவாகி இருக்கிறது.

இதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இதற்கிடையில், இப்படத்தின் புரமோஷனில் ஒரு பகுதியாக, விஷ்ணு சமீபத்தில் தெலுங்கு ஊடகங்களுடன் உரையாடினார்.

அப்போது அவர், ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வெளிப்படுத்தினார். அதன்படி, தனது தந்தை மோகன் பாபுவின் ஏதேனும் ஒரு படத்தை ரீமேக் செய்ய விரும்பினால், பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டரான 'அசெம்பிளி ரவுடி' யைத் தேர்ந்தெடுப்பேன் எனவும், 'தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலா இந்த ரீமேக்கை இயக்க தான் விரும்புவதாகவும் விஷ்ணு கூறினார். கண்ணப்பா படத்தில் மோகன்பாபு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்