’மிராய்’ நடிகையின் அடுத்த படம்...டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
இப்படத்திற்கு ’கொரியன் கனகராஜு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.;
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ். இவர் சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால், ஆக்சன், பீரியட் டிராமாக்களில் இருந்து விலகி, தற்போது ஹாரர் காமெடி பக்கம் திரும்பி இருக்கிறார். இதில் ‘மிராய்’ பட நடிகை ரித்திகா நாயக் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு ’கொரியன் கனகராஜு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் குறிக்கும் வகையில் படக்குழு ஒரு சுவாரசியமான டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.
இதில் வருண் தேஜ் வேட்டி அணிந்து, கட்டானாவை ஏந்தியபடி, கையில் சிவனின் உருவம் பச்சை குத்தியபடி வித்தியாசமாக தோற்றத்தில் காணப்படுகிறார். வருண் தேஜ் இதுவரை இல்லாத ஒரு மாஸ் அவதாரத்தில் தோன்றி இருக்கிறார். கொரியன் கனகராஜு படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன, தமன் இசையமைக்கிறார்.