“90 நாட்கள் பிக் பாஸ்…வெளியே வந்ததும் தனிமை” - ரிது சவுத்ரி உருக்கம்

பிக் பாஸ் வீட்டில் இருந்த காலத்தில் வெளியே தனக்கு எதிராக விமர்சனங்கள் பரவியதை கேள்விப்பட்டு உணர்ச்சிவசப்பட்டதாக ரிது சவுத்ரி கூறினார்.;

Update:2026-01-19 10:34 IST

சென்னை,

சீரியல்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ரிது சவுத்ரி, சமீபத்தில், பிக் பாஸ் தெலுங்கு சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இறுதி வரை தங்கி 90 நாட்களுக்குப் பிறகு வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு, ரிது சவுத்ரி தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டியில், பிக் பாஸ் வீட்டில் இருந்த காலத்தில் வெளியே தனக்கு எதிராக விமர்சனங்கள் பரவியதை கேள்விப்பட்டு உணர்ச்சிவசப்பட்டதாக கூறினார்.

ரிது சவுத்ரி கூறுகையில், “நான், என் அம்மா, என் அண்ணன், நாங்கள் மூவரும் தான் எங்களுக்கு எல்லாமே. சந்தோஷமா இருந்தாலும், கஷ்டமா இருந்தாலும், அதெல்லாம் எங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வோம். அப்பா மறைந்தபோது மிகுந்த வேதனையில் இருந்தோம். எங்களுக்கு அதிக உறவினர்களும் இல்லை. நான் வீடு வாங்கிய பிறகும், பத்து பேர் கூட எங்கள் வீட்டிற்கு வரவில்லை.

பிக் பாஸில் நான் இருந்தபோது, வெளியே என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் பரவியதை அறிந்து என் அம்மா மிகவும் வருத்தப்பட்டார். அம்மாவை மிகவும் பாதித்தது. பிக் பாஸிலிருந்து பிறர் வெளியே வந்த பிறகு அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால் எங்களுடன் பேச யாரும் இல்லை. இதையெல்லாம் பார்த்து என் அம்மா அழுதார். நான் அவரை ஆறுதல்படுத்தி விட்டு, குளியலறைக்கு சென்று தனியாக அமர்ந்து அழுதேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்