பிக்பாஸ் புகழ் ஜூலிக்கு எங்கு, எப்போது திருமணம்?- வெளியான தகவல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜூலிக்கு முகமது ஐக்ரீம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.;
சென்னை,
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் நர்ஸ் ஜூலி. அந்த புகழ், அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சி வரை கொண்டு போய் சேர்த்தது. ஒரு நர்ஸ்சாக இருந்தபோதும், குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே பெரிய அளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் சினிமா படம் ஒன்றில் அம்மன் வேடமிட்டு நடித்தார். அதன்பின்னர், ஜூலி மாடலிங்கில் படு பிசியாகிவிட்டார். ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு படு வேகமாக சமூகவலைத்தளத்தில் பிரபலமானார்.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜூலிக்கு முகமது ஐக்ரீம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். முகமது ஐக்ரீம் ஜூலியுடன் பிக்பாஸில் கலந்துகொண்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜூலியின் திருமணம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஜனவரி 16ஆம் தேதி சென்னை பரங்கி மலையில் உள்ள செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் இரவு 7 மணியளவில் வரவேற்பும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.