யோகி பாபுவின் 300வது படம்.. பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.;

Update:2026-01-01 12:58 IST

சென்னை,

அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடிகர் யோகி பாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். ராஜ் மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் டைட்டிலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இதற்காக அவருக்கு தனது நன்றி.

‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் தான் எனது 300வது திரைப்படம். இந்த 300 படங்களைத் தாண்டி இன்னும் நான் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். இத்தனை படங்களில் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

மேலும், இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற மக்கள் ஆதரவு அவசியம். எல்லோரும் சந்தோஷமாகவும், நலமாகவும் இருக்க முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன். நன்றி..” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்