"டிமான்ட்டி காலனி 3" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
இந்த போஸ்டரில் நடிகர் அருள்நிதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.;
சென்னை,
'டிமான்ட்டி காலனி 3 ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி , பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் அருள்நிதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.