திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

விரைவில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இளையராஜா தெரிவித்தார்.;

Update:2026-01-01 14:17 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த பின்னர் இளையராஜாவுடன் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, அண்ணாமலையாரின் அருளால் விரைவில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், அனைவரும் அதனை கேட்டு ரசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்