தமிழ் ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றுமா ''கூலி''?

தற்போது அனைவரின் பார்வையும் கூலியின் மீது குவிந்துள்ளது.;

Update:2025-07-29 12:37 IST

சென்னை,

கடந்த சில வருடங்களாக, இந்திய சினிமா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. ''பாகுபலி'', ''ஆர்ஆர்ஆர்'', ''புஷ்பா'' போன்ற தெலுங்கு படங்கள் தேசிய அளவில் ஜொலித்தன. ''கேஜிஎப்'', ''காந்தாரா'' போன்ற கன்னட படங்களும் மிகப்பெரிய வசூலை ஈட்டின.

மலையாள சினிமாத்துறையும் பல பெரிய வெற்றிகளை வழங்கியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான தமிழ் படங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. தமிழ் படங்கள் இன்னும் தேசிய அளவில் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

''லியோ'', ''வேட்டையன்'', ''இந்தியன் 2'', ''தக் லைப்'' போன்ற படங்கள் அந்த பெரிய வெற்றியை கொடுக்கும் என்ப எதிர்பார்க்கப்பட்டநிலையில் அது நடக்கவில்லை. இப்போது, அனைவரின் பார்வையும் கூலியின் மீது குவிந்துள்ளது.

''கூலி'' ரூ.1,000 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற சாதனை படைக்கும் என்று தமிழ் பார்வையாளர்களும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இருக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர்கான் போன்ற பெரிய நட்சத்திரங்கல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்