ஓடிடிக்கு வரும் திகில் படம் ’டைஸ் ஐரே’...எதில் , எப்போது பார்க்கலாம்?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.;

Update:2025-11-30 10:11 IST

சென்னை,

பிரணவ் மோகன்லால் நடித்த சமீபத்திய மலையாள பிளாக்பஸ்டர் ஹாரர் படமான ‘டைஸ் ஐரே’, டிசம்பர் 5 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படத்தை, ’பூதகளம்’ மற்றும் ’பிரமயுகம்’ போன்ற திகில் படங்களை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்