இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.;

Update:2025-11-28 06:17 IST

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்'

ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வெப் தொடர், 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்'(Stranger Things). இதன் 5வது சீசனின் முதல் எபிசோடு நேற்று நெட்பிளிக்ஸில் வெளியானது. அடுத்த எபிசோடு டிசம்பர் மாதம் வெளியாகிறது. 

'ஆர்யன்'

பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கிரைம்-திரில்லர் திரைப்படம் 'ஆர்யன்'. இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று ரிலீசாகிறது.

'ஆண் பாவம் பொல்லாதது'

ரியோ ராஜ் நடிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரிலீசான காமெடி-ரொமான்டிக் திரைப்படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

'ரேகை'

தமிழில் உருவாகியுள்ள கிரைம்-த்ரில்லர் வெப் தொடர் 'ரேகை'. இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

'தி பெட் டிடெக்டிவ்’

அனுபமா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த காமெடி-திரில்லர் திரைப்படம் 'தி பெட் டிடெக்டிவ்’(The Pet Detective). இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

’மாஸ் ஜதாரா’

ரவி தேஜா-ஸ்ரீலீலா நடிப்பில் தெலுங்கில் உருவான ஆக்சன் திரைப்படம் ’மாஸ் ஜதாரா’(Mass Jathara). இப்படம் தமிழ் உட்பட தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று ரிலீசாகிறது.

'சசிவதனே’

தெலுங்கில் உருவான ரொமான்டிக் திரைப்படம் 'சசிவதனே’(Sasivadane). இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இன்று ரிலீசாகிறது.

'ரக்டபீச் 2’

திரில்லர் கதைக்களத்தில் உருவான பெங்காலி திரைப்படம் 'ரக்டபீச் 2’(Raktabeej 2). இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

'கரிமுல்லா பிரியாணி பாயிண்ட்’

தெலுங்கில் வெளிவந்த காமெடி திரைப்படம் 'கரிமுல்லா பிரியாணி பாயிண்ட்’(karimulla Biryani Point). இப்படம் வரும் 30ம் தேதி இடிவி வின் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.

’பெல் ஏர்’

2022ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் டீன் ஏஜ் டிராமா வெப் தொடர் ’பெல் ஏர்’(Bel-Air). மூன்று சீசன்களாக ஓடிடி பிரியர்களை ஈர்த்து வரும் இத்தொடரின் 4வது சீசன் கடந்த 25ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசானது.

'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'

ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'. இப்படம் ஜீ5-யில் டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

’தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்’

ஜஸ்வினி ஜே இயக்கிய திரில்லர் வெப் தொடர் ’தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்’ . இத்தொடர் டிசம்பர் 5 முதல் ஆஹாவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்