ராஷ்மிகாவின் திகில் படம் ’தம்மா’...ஓடிடியில் வெளியாவது எப்போது?

ஆதித்யா சர்போத்தர் இயக்கிய தம்மா படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்திருந்தார்.;

Update:2025-11-28 12:50 IST

சென்னை,

நட்சத்திர நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் முற்றிலும் வெவ்வேறு வகையான இரண்டு படங்கள் தொடர்ச்சியாக வெளியாகின. ஒன்று தி கேர்ள்பிரண்ட், மற்றொன்று திகில்-நகைச்சுவை படமான தம்மா.

ஆதித்யா சர்போத்தர் இயக்கிய தம்மா படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியானபோது கலவையான விமர்சனக்களை பெற்றது. இப்போது அனைவரின் கவனனும் அதன் ஓடிடி ரிலீஸௌ நீக்கி திரும்பி இருக்கிறது.

அதன்படி, இந்த படம் டிசம்பர் 16ப்ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், தி கேர்ள்பிரண்ட் படத்தின் ஓடிடிக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்