ஓடிடியில் வெளியாகும் காதல் படம் ‘சசிவதனே’...எதில் எப்போது பார்க்கலாம்?
கடந்த மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.;
சென்னை,
ரக்க்சித் மற்றும் கோமலி பிரசாத்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'சசிவதனே' திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம், கடந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது பெரிய அளவில் பார்வையாளர்களைச் சென்றடையவில்லை. வெளியான சில நாட்களுக்குள் காணாமல் போனது.
இந்நிலையில், சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, இப்படம் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 28-ம் தேதி முதல் சன் நெக்ஸ்டில் ஸ்டிரீமிங் ஆக இருக்கிறது.