ஓடிடியில் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ ... எப்போது, எதில் பார்க்கலாம்?
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.;
சென்னை,
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், ஆர்யன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 28ந் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.