காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதுகின்றன.

Update: 2022-08-07 16:05 GMT

image courtesy: BCCI Women twitter

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி செல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்