ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா.. 20-ம் தேதி கொடியேற்றம்

ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 28ஆம் தேதி நடைபெறுகிறது.;

Update:2025-07-16 17:41 IST

ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா, வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நாட்களில் தினந்தோறும் ஆண்டாள் ரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

24ஆம் தேதி ஐந்து கருட சேவை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். 26ஆம் தேதி சயன சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறிது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம், 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்திற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

ஆடிப்பூர திருவிழாவைக் காண வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் வெளி மாநில பக்தர்கள் தங்கியிருந்து பத்து நாட்களும் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே அன்னதானங்கள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்