தஞ்சாவூர்: ராமானுஜபுரம் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடைப்பெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
4 கால யாகசாலை பூஜைகள் முடிந்த நிலையில் வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் ஸ்ரீ பால விநாயகர், திரௌபதி அம்மன், மாணிக்க நாச்சியார் உள்ளிட்ட பரிகார தெய்வங்களின் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.