வெள்ளியங்கிரி மலையேற 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி
கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.;
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பு ஆண்டு வரும் 1ம் தேதி முதல் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக், தீப்பிடிக்கக்கூடிய பொருகளை கொண்டு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது.