திருப்பதியில் இன்று ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா

ஒரே நாளில் உற்சவர் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.;

Update:2026-01-25 08:08 IST

திருமலை,

ரத சப்தமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. இந்த வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆர்ஜித சேவைகள் ரத்து

ரத சப்தமி விழாவையொட்டி இன்று கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், முக்கியமான வி.ஐ.பி.களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்