திருப்போரூர் திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.;

Update:2025-06-22 15:43 IST

திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் கடந்த 4-ம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் தெருக்கூத்து கலைஞர்களால் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

கடைசி நாளான இன்று காலை படுகளம் எனப்படும் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு படுகளம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

மாலை 7 மணி அளவில் தீமிதி விழா நடைபெறுகிறது. அதன்பிறகு அம்மனுக்கு மகா தீபாரதனை நிகழ்ச்சியும், இரவு மேளதாளம், வானவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 

Tags:    

மேலும் செய்திகள்