பல்லடம்: காரணப் பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு விழா
ஆண்டுவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.;
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாள் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய நடைபெற்ற விழாவில் பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் வேள்வி நிறைவு ஆகியன நடைபெற்றன.
ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாள், துர்க்கை அம்மன், ஆஞ்சநேயர், அரசடி விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆண்டு விழாவை கோடங்கிபாளையம் ஆனந்தபுரி ஆதீனம் பழனிசாமி அடிகளார், சிவபுரம் மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.