ஆண்கள் மட்டுமே தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய குண்டம் திருவிழா

தலைமை பூசாரி வெங்கடேசன் என்பவர் குண்டம் இறங்கி திருவிழாவை துவக்கி வைக்க, பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.;

Update:2025-03-27 15:28 IST

கோபி அருகே உள்ள காசிபாளையம் கரிய காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 13ஆம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 21ஆம் தேதி நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 24ஆம் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்கார நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாவிளக்கு பூஜை நடந்தது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி வெங்கடேசன் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து ஆண்கள் மட்டுமே குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். கோபி, அளுக்குளி, பிள்ளையார் கோவில் துறை, காசிபாளையம், காந்திநகர், சிங்கிரிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்