காளஹஸ்தியில் குருப்பெயர்ச்சி விழா
குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மூலவர் குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.;
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள குருதட்சிணாமூர்த்தி சன்னதியில் கருணா குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் கலசம் ஏற்பாடு செய்து சிறப்புப்பூஜைகள், விஸ்வநாத குருக்கள் தலைமையில் யாகப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மூலவர் குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
இந்நிகழ்வில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.