கந்தகோட்டம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.;

Update:2025-07-16 11:28 IST

சென்னை பூக்கடையில் உள்ள கந்தக்கோட்டம் கந்தசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த 10-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கி, அன்று முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 4-ம் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 5-ம் கால பூஜை நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு ஆறாம் கால பூஜையைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின்னர் 10.30 மணிக்கு ராஜகோபுரம், அனைத்து விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் மீது  புனித நீர் தெளிக்கப்பட்டது. 

கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் அமைந்துள்ள இடம் குறுகலாக இருப்பதால் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, மக்கள் வரிசையில் நின்று கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்