காரைக்கால் கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.;

Update:2025-06-05 14:55 IST

காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கயிலாசநாதர் கோவிலுக்கு கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 17 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாலயம் மற்றும் திருப்பணி துவக்க விழா நடைபெற்றது. தொடர்ந்து திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றன.

திருப்பணி வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இன்று அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாக பூஜை துவங்கியது. இந்த பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு மகாபூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. 8 மணிக்கு ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி, ஸ்ரீ சுந்தராம்பாள் விமான கலசங்கள் மற்றும் ராஜ கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 8. 45 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் மற்றும் இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம், பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்