கிருத்திகை உற்சவம்: பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு

தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னகுமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.;

Update:2024-11-17 09:30 IST

பழனி,

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தமிழ்மாத பிறப்பு, கிருத்திகை நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று கார்த்திகை மாதப்பிறப்பு மற்றும் கிருத்திகை உற்சவம் என்பதால் பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜை, 9 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து பெரிய தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இரவு 7 மணி அளவில் தங்கரதபுறப்பாடு நடந்தது. இதில் 109 பேர் தங்கரதத்தை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்