நாமக்கல்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திருமண வைபோகம்

திருமண வைபோகம் மற்றும் லட்சார்ச்சனை பெருவிழாவை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.;

Update:2025-11-27 12:51 IST

சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், லட்சுமி சமேத தாத்ரி நாராயண பெருமாளுக்கு ஆண்டுதோறும் திருமண வைபோகம் மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா நடைபெறும். 

அவ்வகையில் 74-ஆம் ஆண்டு திருமண வைபோக‌ விழாவை முன்னிட்டு கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதி காலை 8 மணிக்கு சர்வத்திர திருமஞ்சனம், லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

24-ஆம் தேதி காலை திருமஞ்சனமும், 10 மணிக்கு மேல் திருமண வைபோக விழாவை முன்னிட்டு மஞ்சள் இடித்தலும் மதியம் 1 மணிக்கு மேல் அன்னப்பாவாடை மற்றும் மகா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு கோவில் முன்பு திருக்கொடி ஏற்றுதலும், முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு லட்சுமி சமேத தாத்ரி நாராயண பெருமாளுக்கு லட்சார்ச்சனை, அபிஷேக ஆராதனைகளும், திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் மதியம் 1 மணிக்கு திருமண வைபோக விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்