சென்னை காலடிப்பேட்டை பெருமாள் கோவில் தேரோட்டம்

உற்சவர் பவளவண்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ராஜ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.;

Update:2025-05-18 10:26 IST

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் பவளவண்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ராஜ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

பின்னர் திருவொற்றியூர் மண்டலக்குழுத் தலைவர் தி.மு.தனியரசு உள்பட திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.. என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த தேர் இறுதியில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்