புரட்டாசி மாத கிருத்திகை... முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-10-10 16:24 IST

தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவிலி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அறுபடை இல்ல முருகன் அன்னதான கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று கடைவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரதிபுரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், லலிகம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்பிரமணியசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் இண்டூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 

திருக்காட்டுப்பள்ளி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அவனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி முன் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்