சூலக்கல் மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;

Update:2025-07-11 14:24 IST

கோவை கணபதி சத்திரோடு மணியகாரம்பாளையம் பிரிவில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அம்மனுக்கு வண்ணப் பட்டாடை மற்றும் அணிகலன்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டும், பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்