வேலாயுதம்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாட்டில் வேலாயுதம்பாளையம், புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகழூர் நகராட்சி வாரச்சந்தை எதிரே உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு ஐயப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த சிறப்பு வழிபாட்டில் வேலாயுதம்பாளையம், புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.