திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் திருப்பணி: ஜீயர் சாமிகள் துவக்கி வைத்தார்

கோவில் ராஜகோபுரம் அருகே திருப்பணிகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2025-08-22 17:30 IST

வரலாற்றில் புகழ்பெற்றதும் ஆண்மீகத்தில் பிரசித்தி பெற்றதுமான திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் திருப்பணி மற்றும் மேற்கு கோபுரம் திருப்பணி மற்றும் இதர திருப்பணிகளும் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நடைபெற உள்ளன.

இந்த திருப்பணிகளுக்கான பூஜை கோவில் ராஜகோபுரம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கோவில் மடாதிபதி ஜீயர்சாமிகள், திருப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று நிறைவுபெற வேண்டி சிறப்பு பூஜை செய்து திருப்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்