உளுந்தை கரியமாணிக்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update:2025-08-28 15:31 IST

வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத கரியமாணிக்கப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா தொடங்கியது. திங்கட்கிழமை பகவத் அனுக்ஞை, விக்னேஸ்வர பிரார்த்தனை, யஜமான சங்கல்பம், அங்குரார்ப்பணம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை புண்யாஹவாசனம், தீர்த்தஸங்கிரஹம், ஹோமங்கள் உள்ளிட்டவையும், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் திருமஞ்சனம் நடைபெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கும்பஉத்தாபனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்