வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-06-10 19:48 IST

கோப்புப்படம் 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்தநிலையில் வைகாசி மாத பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.32 மணிக்கு தொடங்கி மறுநாள் 11-ந் தேதி(புதன்கிழமை) மதியம் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.

பவுர்ணமியை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்