வல்லம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-05-27 13:35 IST

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே வல்லம் கீழத் தெருவில் கன்னிகா பரமேஸ்வரி சப்த கன்னி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிந்த நிலையில் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

யாகசாலை பூஜைகள் முடிவடைந்த நிலையில், புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கடத்தை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்துக்கு சென்றனர். பின்னர் வாண வேடிக்கையுடன் மங்கள வாத்தியம் முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, கருடன் வானில் வட்டமிட, விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் கருவறையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி சப்த கன்னி திரு உருவத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்