விசாக நட்சத்திர தினம்.. பொத்தனூர் பச்சமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.;

Update:2025-12-17 15:43 IST

 சிறப்பு அலங்காரத்தில் பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் விசாகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை யாக பூஜையும் அதனைத் தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர், சந்தனம், தேன் மற்றும் 18‌ வகையான திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

சிறப்பு வழிபாட்டில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்