கரூரில் விஜய் பிரசாரம் செய்யும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக அந்த மாவட்டத்தின் தவெக செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை எச்சரிக்கை செய்தும் அஜாக்கிரதையாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.