தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலையை போல, வெள்ளியும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.;

Update:2025-09-13 09:43 IST

சென்னை,

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.

இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.

இந்த சூழலில் கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல், அதனுடைய வேகத்தில் நிசப்தம் நிலவி வந்த சூழலில், நேற்று மீண்டும் எகிறி, உயர்ந்து காணப்பட்டது. இதன்படி நேற்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,920-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,760-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.10,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போல, வெள்ளியும் கட்டுக்கடங்காமல் உயருகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.143க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

13.09.2025 ஒரு சவரன் ரூ.81,760 (இன்று)

12.09.2025 ஒரு சவரன் ரூ.81,920 (நேற்று)

11.09.2025 ஒரு சவரன் ரூ.81,200

10.09.2025 ஒரு சவரன் ரூ.81,200

09.09.2025 ஒரு சவரன் ரூ.81,200

08.09.2025 ஒரு சவரன் ரூ.80,480

Tags:    

மேலும் செய்திகள்